Search This Blog
Saisivatamiltech.blogspot.com daily jobs tamilnadu latest jobs Tamil jobs latest daily jobs tamilnadu government jobs tamilnadu job tamilnadu jobs
Featured
- Get link
- X
- Other Apps
உயர் கல்வி வழிகாட்டி கீழே முழுவதும் படியுங்கள் வேலை வழிகாட்டி.
மேல்நிலைக் கல்வியைப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் முன் நிற்கும் முக்கியக்
கேள்வி, அடுத்து என்ன படிக்கலாம்? என்பதுதான்!
என்ன படிக்கலாம்? என்பதை முடிவுசெய்வதற்கு முன்னதாக ஒரு மாணவர், தன்னைப்
பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னைப் புரிந்துகொள்ளுதல் என்பது தனது விருப்பம்,
படிக்கும் திறன், திறமை, குடும்பச் சூழ்நிலை போன்றவற்றைத் தெரிந்துகொள்ளுதல்
ஆகும். அதன்பின்பு, எந்தப் படிப்பில் சேரலாம்? அதற்கான வாய்ப்புகள் எங்கு உள்ளன?
என்பனவற்றைப் புரிந்துகொண்டு அடுத்து என்ன படிக்கலாம்? என்பது குறித்து மாணவர்கள்
முடிவெடுக்க வேண்டும்.
பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர்கல்விப் படிப்பைத் தொடர்வதன்மூலம்,
நல்ல வேலையில் சேர்ந்தோ, தொழில் முனைவோராகவோ, சுயதொழில் தொடங்கியோ,
தமது முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பங்களிக்க முடியும்.
தனிமனிதனின் ஒவ்வொரு சாதனைக்கும் பள்ளிக்கல்வியே அடித்தளமாக விளங்குவதால்
மாணவர்களுக்கேற்ற உயர்கல்வி வாய்ப்பை உருவாக்கித் தருவதில் பள்ளிக்கல்வி முக்கியப்
பங்காற்றுகிறது.
சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மாணவர்களின் உயர்கல்விக்
கனவை நனவாக்கும் வகையில் இந்தப் புத்தக ம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக,
உயர்கல்வி தொடர்பாக மாணவர் மனதில் எழும் ஐயப்பாடுகளுக்குத் தகுந்த ஆலோசனைகளை
வழங்க பள்ளிகள்தோறும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆலோசனை மையங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படும் இந்த
மையங்கள், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்குகிறது, மேலும் உயர்கல்விப்
படிப்புகள், மாணவர் சேர்க்கைமுறை, நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, உரிய
வேலைவாய்ப்பு போன்ற தகவல்களை நான் முதல்வன் இணையதளம் (naanmudhalvan.
tnschools.gov.in) வாயிலாக வழங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குடும்பச் சூழ்நிலை காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத மாணவர்கள் இந்த பதிவை படியுங்கள் பயன்பெற்று வாழ்க்கையில் முன்னேற
👍👇👇👇👇👇👇👇👍👇👇👇👇👇👇👇
- Get link
- X
- Other Apps
Popular Posts
ICF சென்னை ஆட்சேர்ப்பு 2023 10வது தேர்ச்சி எந்த பட்டப்படிப்புக்கும் ஜூனியர் கிளார்க் மற்றும் சீனியர் கிளார்க் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment