Skip to main content

Featured

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் விடியல முடியல புகார் பெட்டி  பாஜக சார்பில் ஜூலை 28 என் மண் என் மக்கள் நடை பயணத்தின் போது விடியல முடியல புகார் பெட்டி  இதில் மக்களுக்கு ஏற்பட்ட குறைகளை இந்த புகார் பெட்டியில் எழுதி போட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவே மக்களின் குறைகளை இந்த புகார் பெட்டியில் எழுதி பேட்டியில் எழுதி போடுங்கள்  ஆற்காடு கிழக்கு ஒன்றியம் ஊடக பிரிவு தலைவர்  பா. சிவா     

காலரா பரவல் காரணமாக அடுத்து 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை !!!



காரைக்காலில் தற்போது பரவிக்கொண்டிருக்கும் காலரா தொற்று எதிரொலியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிராந்தியமான காரைக்கால் பகுதியில் கடந்த ஒரு சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் இதுவரை 1000க்கும் மேற்பட்டவர்கள் இது போன்ற பாதிப்புகளால் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காலரா தொற்று இருப்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் நோய்பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இது குறித்து காரைக்கால் மாவட்ட மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் பிறப்பித்துள்ள உத்தரவில், காலரா பரவல் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் இன்று (ஜூலை 4) மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments